ஹேஷ்டேக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெல்லிசை’. கிஷோர் குமார் மற்றும் புதுமுகம் தனன்யா நடிக்கின்றனர்.படம் பற்றி இயக்குனர் கூறும்போது, காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை ‘மெல்லிசை’ பேசுகிறது. தந்தை மகளுக்கு இடையிலான உறவையும் பேசுகிறது. அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைன் கதையையும் கொண்டுள்ளது.


