Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

சமூக வலைதளங்கள் குறித்து பேசவரும் நடிகர் கலையரசனின் ‘டிரண்டிங்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள ‘டிரண்டிங்’ என்ற புதிய படத்தை சிவராஜ் என்ற புதிய இயக்குநர் இயக்கியுள்ளார். இதில் கலையரசன், பிரியா லயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை சாம் சி.எஸ் வழங்கியுள்ளதுடன், ஒளிப்பதிவை பிரவீன் பாலு மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் சிவராஜ் கூறுகையில், “இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக இளம் தம்பதிகள் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் உருவாகும் சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இது ஆன்லைனில் முழுமையாக மூழ்கியிருக்கும் தம்பதிகள் குறித்த கதையாகும். மூன்று முக்கியக் கதாப்பாத்திரங்களின் கோணத்தில் இந்த கதை நகரும். பிரபல யூடியூபர்களாக கலையரசன் மற்றும் பிரியா லயா நடித்துள்ளனர். இணையத்தில் ஒரு விளையாட்டைத் தொடங்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அந்த விளையாட்டு, இறுதியில் அவர்களை எந்தவிதமான சிக்கல்களில் இழுக்கிறது என்பதே திரைக்கதை” என்றார்.

- Advertisement -

Read more

Local News