‘காதல் தேசம்’ முதற்கொண்டு பல திரைப்படங்களில் நடித்தவர் அப்பாஸ். அவருக்கு தனிப்பட்ட ரசிகைகள் வட்டம் உள்ளதாக கூறலாம். ஹீரோவாகவும், நண்பன் கேரக்டர்களாகவும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்தவர். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலாகி விட்டார். ‘ராமானுஜன்’ படமே அவர் கடைசியாக நடித்த படம். அந்த படம் 2014ஆம் ஆண்டு வெளியாகியது. அதன் பிறகு அவர் இந்தியாவுக்கு அதிகமாக வரவில்லை.

இந்நிலையில், இயக்குனர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் முக்கியமான வேடத்தில் அப்பாஸ் நடிக்கிறார். இந்த படம் மூலம் நியூசிலாந்திலிருந்து திரையுலகுக்கு மீண்டும் வருகிறார். படம் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிக்கிறாரா என்பது தற்போது மர்மமாகவே உள்ளது. அவரது கதாபாத்திரம் ஒரு வித்தியாசமானது என இயக்குனர் கூறியுள்ளார். இதே போன்று, ஒருகாலத்தில் வெளிநாட்டில் செட்டிலான, மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரனும் தற்போது சென்னை நகரில் மீண்டும் செட்டிலாகி உள்ளார்.