இயக்குனரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். அதாவது நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினமானது. நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே ‘காந்தி கண்ணாடி’யை ஷெரீப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்றுள்ளார்.
