இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ‘விக்ரம்’. மேலும் இப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

விக்ரம் படத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய கதாப்பாத்திரங்களுக்கும் இணையாக, ஏஜெண்ட் டீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த வசந்தியின் நடிப்பும் பெரும் கவனத்தை பெற்றது. அவரது நடிப்பு பாராட்டுக்களை பெற்றதோடு, படம் முழுவதும் ஒரு தனித்துவமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், விக்ரம் படத்தில் வரும் ‘ஏஜெண்ட் டினா’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெப் சீரிஸ் எடுப்பதற்கான திட்டமும் உள்ளது. அதை வேறொரு இயக்குனர் இயக்கவுள்ளார். குறிப்பாக எல்சியு-வை கிளை கதைகளாக கொண்டு செல்லலாம் என்பதும் ஒரு திட்டம், இருப்பினும் காலத்திற்கு ஏற்ப தான் ஒவ்வொன்றும் நடக்கும் என தெரிவித்துள்ளார்.