கூக்கி குலாட்டி மற்றும் ராபி குரோவால் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛ஜூவல் தீப் – தி ஹீஸ்ட் பிகின்ஸ்’. சைப் அலிகான், ஜெய்தீப் அஹ்லாவத், நிகிதா தத்தா மற்றும் குணால் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். திருட்டு தொடர்பான ஆக் ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் சாகச மனப்பான்மை மற்றும் குடும்பத்தின் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட அழகான முரடனாக ரெஹான் ராயாக சைப் நடித்துள்ளார். இந்த படம் இன்று(ஏப்., 25) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
