ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘சிக்கந்தர்’ ஒரு புராணக் கதை அடிப்படையிலான திரைப்படமாகும். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். சல்மான் கான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சஜித் நதியத்வாலா தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ‘தீனா’, ‘ரமணா’, ‘ரஜினி’, ‘கத்தி’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராசி’ எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.
சஞ்சய் திப்பாதி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பின்னி அண்ட் பேமிலி’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சினி. இவர் நடிகர் வருண் தவானின் உறவினர் கூட. தற்போது அஞ்சினி ‘சிக்கந்தர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், ‘சிக்கந்தர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சல்மான் கான் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக தோன்றி இருக்கிறார். மேலும், நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் ஒரு அமைச்சராக நடித்துள்ளார். இந்த டீசரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.