‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’ போன்ற வித்தியாசமான படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்த இயக்குனர் ராம், தனது புதிய படமான ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு தயாராக வைத்துள்ளார்.
அதையடுத்து, நடிகர் மிரிச்சி சிவாவை வைத்து ராம் மற்றொரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெறும் 45 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சிவா நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார். அவருடன் க்ரேஷ் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது இப்படத்திற்கு ‘பறந்து போ’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் நடைபெறும் ‘ரோட்டர்டேம்’ திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.