‘மதராசபட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ போன்ற படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். கடைசியாக இவர் இயக்கிய ‘மிஷன்: சாப்டர் 1’ நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஏ. எல். விஜய் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கலகலப்பான புரோமோ வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘வனமகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஏ. எல். விஜய் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த புரோமோ வீடியோவில் ஹாரிஸ் ஜெயராஜ் கலகலப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன் என புதிய முகங்கள் நடிக்கின்றனர். ஒரு முக்கியமான குணசித்திர வேடத்தில் எம். எஸ். பாஸ்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

