கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ஆனால் அறிவிப்பு வெளியான சில நாட்களில் சுந்தர்.சி சில காரணங்களால் இந்த படத்தை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அதன் பின்னர் வந்த தகவல்களில், இந்த படத்தை நிதிலன் சுவாமிநாதன் அல்லது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கக்கூடும் என கூறப்பட்டது.
இப்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதை ரஜினிகாந்தை கவர்ந்துள்ளது என்றும் இந்த படத்தை அவரே இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு நடிக்கவிருந்த ஒரு கதையை சில மாற்றங்கள் செய்து தற்போது ரஜினிகாந்துக்கு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

