Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

இசைஞானி இளையராஜாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்த நீதிமன்றம் தடை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா தரப்பில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, இளையராஜாவை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி பட்டம், குரல் எதையும் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.

சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அதேபோல், அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்துப் பார்த்து, இளையராஜாவின் புகைப்படங்களை இடைக்காலமாக பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News