நடிகர் சுரேஷ் கோபி:
நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதைத் தாண்டி என்னுடைய சில படங்கள் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன. நான் ஒருநாளும் பத்ம விருதுக்கு விண்ணப்பித்ததில்லை. பலர் விண்ணப்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனை நான் செய்ய மாட்டேன். தேசிய விருதுகள் தாமாகவே வரவேண்டும். என்னை மூவர்ணக் கொடியால் சுற்றி, இந்தியா சார்பில் துப்பாக்கி ஏந்திய மரியாதை கொடுத்தால் போதும். இருந்தாலும், ஒருவேளை அப்படியொரு கெளரவம் கிடைத்தால் அதை மரியாதையோடு ஏற்றுக்கொள்வேன்.


