இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பறந்து போ’. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தமிழில் அறிமுகமானார்.

சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட கிரேஸ் ஆண்டனி அது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தீவிர டயட்ஸ் மற்றும் உடற்பயிற்சி மூலம் 15 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், ’80 கிலோ உடல் எடை இருந்த நான் கடந்த 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்து 65 கிலோ ஆகியிருக்கிறேன்’ என்று தெரிவித்து அது குறித்து புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

