Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

பெண்கள் கேலிக்கு ஆளாகாத சூழல் கொண்ட இடங்களில் பணிபுரிய விரும்புகிறேன் – நடிகை திவ்யபாராதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பேச்சுலர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. அதன்பிறகு ‘மகாராஜா, கிங்ஸ்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘கோட்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தை நரேஷ் குப்பிலி இயக்குகிறார், சுதீர் நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஒருவர் தன்னை கடுமையான வார்த்தைகளில் திட்டியதாக திவ்யபாரதி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குனர் ஒரு குறிப்பிட்ட வார்த்தை சொல்லி என்னை அழைக்கிறார். அந்த வார்த்தைக்கு பறவை என்று பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படும் வார்த்தை. இது எனக்கு நகைச்சுவையாக தெரியவில்லை. 

இழிவான வார்த்தைகளாலும் அழைப்பதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது பெண் வெறுப்பு சிந்தனையின் பிரதிபலிப்பு. இது ஒருமுறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. அந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதேபோன்று பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். இயக்குனரின் இச்செயலுக்கு இப்படத்தின் ஹீரோவும் அமைதியாக இருப்பதை பார்த்து, இதுபோன்ற கலாசாரம் நிலைத்திருக்க உதவுகிறது என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

பெண்கள் கேலிக்கு ஆளாகாத சூழல் கொண்ட இடங்களில் பணிபுரிய, அந்த இடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம். மரியாதையை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது உறுதியான நிலை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News