தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நேற்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவர் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், ரூ.10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் காரை பரிசளித்துள்ளார்.

அந்த காருடன் தனது இரு மகன்களுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நயன்தாரா. நீ பிறந்த நாள் எங்களுக்கு ஒரு வரம்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளிலும், நயன்தாரா சிறப்பு பரிசுகள் வழங்குவது மற்றும் அவரை வெளிநாட்டு டூர் அழைத்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

