Touring Talkies
100% Cinema

Saturday, November 8, 2025

Touring Talkies

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கவுரவம் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் மிக முக்கியமான திரை விழாக்களில் ஒன்றான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India – IFFI) கோவாவில் வரும் நவம்பர் 20ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் இந்திய திரையுலகின் முக்கிய நபர்கள் மற்றும் படைப்புகள் கவுரவிக்கப்படுகின்றன. இதன் நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கவுரவம் பெறுகிறார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்காகவே இந்த பெருமை அவருக்கு வழங்கப்படுவதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், இவ்விழாவில் மறைந்த திரையுலக நாயகர்கள் குருதத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா, மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு நினைவுக் கொண்டாட்டங்களும் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News