Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

நடிகர் மகேஷ்பாபுவை நகைச்சுவையாக கிண்டலடித்த நடிகை பிரியங்கா சோப்ரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக பிரியங்கா சோப்ரா தேர்வாகி நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத்துக்கு வருவதை வழக்கமாக்கியுள்ள அவர், அங்கு சுற்றிவரும் பல்வேறு இடங்களின் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, மற்றும் வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கிடையில் X தளத்தில் நடந்த நகைச்சுவையான உரையாடலில், மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “சார், நீங்க எப்போ மகாபாரதத்தை ஆரம்பிக்கப் போறீங்க? நம்ம  நடிகை ஒருவர் (பிரியங்கா சோப்ரா) ஏற்கனவே கடந்த ஜனவரிமாதம் முதல் இதுக்காகவே ஐதராபாத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறார்!” என்று கிண்டலாக கூறியிருந்தார். 

அதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா தானும் நகைச்சுவையாகப் பதிலளித்து, விடியற்காலையில் ஐதராபாத்தில் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்ததுடன், ஹலோ ஹீரோ! நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியே நான் லீக் பண்ணட்டுமா? என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News