தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், சினிமா மட்டுமன்றி கார் பந்தய உலகிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அவர் 3வது இடத்தைப் பெற்றார். மேலும், இவ்வாண்டின் இறுதியில் மலேசியாவிலும், அடுத்தாண்டு (2026) அபுதாபியிலும் நடைபெறும் சர்வதேச கார் பந்தய போட்டிகளில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கிறது.

இதற்கிடையில், அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு மக்கள்மயமான கமர்ஷியல் எண்டர்டெயினராக அமையும் என ஆதிக் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படம் மற்றும் சிறப்பு நேர்காணலுக்காக எடுக்கப்பட்ட அஜித் குமாரின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் மாத இதழில் அஜித்தின் வாழ்க்கை மற்றும் அவரது ஆளுமை குறித்த பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

