Touring Talkies
100% Cinema

Monday, October 27, 2025

Touring Talkies

நான் அதிக சம்பளம் கேட்கிறேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மமிதா பைஜூ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான ‘ரெபல்’ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமானவர் மமிதா பைஜு. பின்னர் அவர் நடித்த ‘பிரேமலு’ மலையாள படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, தமிழ் ரசிகர்களிடையிலும் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.

இந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த ‘டியூட்’ திரைப்படம் அவரை தமிழ் திரையுலகில் மேலும் பிரபலமாக்கியது. தற்போது அவர் விஜய்யுடன் நடிக்கும் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46வது படம், மேலும் ‘இரண்டு வானம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

‘டியூட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மமிதா பைஜு 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார் என்ற செய்தி கடந்த வாரம் பரவியது. ஆனால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள மமிதா அதுகுறித்து பதிலளிக்கையில், அதிர்ச்சியடைந்து அந்த செய்தியை மறுத்துள்ளார். “அது முழுக்க முழுக்க வதந்தி. என் சம்பளம் எவ்வளவு என்பது தயாரிப்பாளர்களுக்கே தெரியும். இப்படி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News