Touring Talkies
100% Cinema

Friday, October 24, 2025

Touring Talkies

சிலர் என் கடினமான தருணங்களை கொண்டாடினர் – நடிகை சமந்தா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா கடைசியாக நடித்த படம் ‘சுபம்’. இது அவரின் தயாரிப்பாளராகிய முதல் முயற்சியாகும். தற்போது சமந்தா பாலிவுட்டில் ‘ரக்த் பிரம்மந்த்’ என்ற படத்திலும், மேலும் சாம் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். ‘மா இன்டி பங்காரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே சமயத்தில், பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடுமோருவை சமந்தா காதலித்து வருகிறாரெனும் வதந்திகள் திரைப்பட வட்டாரங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து  இருவரும் இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் அனுபவங்களைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் அந்த நேர்காணலில் பேசும்போது, என் வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் சிரமத்திற்குள் இருந்தபோது சிலர் அதை கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட்டபோது சிலர் கேலி செய்தனர். என் விவாகரத்தின் போது சிலர் மகிழ்ச்சியடைந்தனர் இப்படி என் கடினமான தருணங்களை கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்தபோது மனதிற்கும் உடலுக்கும் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், காலப்போக்கில் அவை குறித்து கவலைப்படுவதை நான் முழுமையாக நிறுத்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News