இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடிகர் சிம்புநடித்துவருகிறார். இப்படம் வடசென்னையில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக இருக்கிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா மற்றும் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் என்றும் குறிப்பாக இளமை மற்றும் முதுமை என இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இயக்குநர் வெற்றிமாறன், சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்துடனான அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார் இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் இப்படத்தின் புரொமோ வீடியோ யூடியூப் தளத்தில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.