ஹாஸ்யா மூவிஸ் மற்றும் மாகந்தி இணைந்து தயாரிப்பில் யோகேஷ் கேஎம்சி இயக்கும் திரைப்படம் தி பிளாக் கோல்ட்.மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை சம்யுக்தா மேனன், தமிழில் கடைசியாக ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்திலும் சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். இதோடு, அவர் இன்னும் சில பெயரிடப்படாத தெலுங்கு படங்களிலும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்தே, தீபாவளி வாழ்த்துகளுடன் இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.