நடிகை சமந்தா அல்லு அர்ஸூனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ பாடலில் நடனமாட காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ’நான் என்னை சோதித்துப் பார்க்கவே ‘ஊ சொல்றியா’ பாடலில் நடித்தேன். அது எனக்கு நானே கொடுத்த சவால்” என்று சமந்தா கூறினார். மேலும், “நான் என்னை ஒருபோதும் கவர்ச்சியாகக் கருதவில்லை. யாரும் எனக்கு ஒரு தைரியமான வேடத்தை கொடுக்கவில்லை. எனவே ஊ சொல்றியா பாடல் எனக்கும் என் கவர்ச்சிக்கும் ஒரு சுயபரிசோதனை போல இருந்தது,” என்றார்.
