Touring Talkies
100% Cinema

Saturday, October 18, 2025

Touring Talkies

வெறும் பழங்களை சம்பளமாக பெற்று நடித்தேன் – நடிகர் கோவிந்தா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி ரூட்டில் பயணித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கோவிந்தா. சமீபத்தில் நடிகை கஜோல் நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற கோவிந்தா ஒரு படத்தில் சம்பளமாக ஒரு டஜன் வாழைப்பழத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறும்போது, “தயாரிப்பாளர் சுபீர் முகர்ஜியின் தாயார் எனது அம்மாவிற்கு ஒரு இக்கட்டான தருணத்தில் ரொம்பவே உதவி செய்திருந்தார். அதனை தொடர்ந்து சுபீர் முகர்ஜியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தபோது அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிவிட்டு ஒரு டஜன் வாழைப்பழமும், ஒரு தேங்காயும் மட்டும் சம்பளமாக கொடுங்கள் எனக்கூறி அதை பெற்றுக்கொண்டு நடித்தேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News