Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

நீங்கள் இதைப் பின்பற்றினால் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கலாம்… இசையமைப்பாளர் சாய் அபயங்கர் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள திரைப்படம் டியூட். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டியூட்’ படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம்வர தொடங்கியுள்ள சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சாய் அபயங்கர், கட்சி சேரா உட்பட ஒரு  ஒரு மூன்று பாடல்களை நான் இன்டிபெண்டன்ட் மியூசிகாக உருவாக்கியிருந்தேன்‌. அவற்றால் படங்களில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்மிடம் ஏதோ ஒன்று பிடித்துள்ளது, பாடலை சரியாக கொடுப்பேன் என நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வருகிறார்கள். அதனை நானும் சரியாக செய்கிறேன் என நம்புகிறேன்.

மேலும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குறித்து கேள்விக்கு பதிலளித்த சாய் அபயங்கர், நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது. அதில் மூழ்காமல் இருந்தாலே விமர்சனங்களில் இருந்து தப்பலாம். நான் அதிகமாக ஸ்டூடியோவில் தான் இருப்பேன். இசை தான் மிகவும் பிடிக்கும்,  வெளியிலும் பெரிதாக செல்வது கிடையாது. எனக்கு பிடித்த மியூசிக்-ஐ செய்கிறேன் மக்களும் அதற்கு ஆதரவு தருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News