காந்தாரா 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்த சவால்களை போட்டோவாக வெளியிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதில், உடல் ரீதியாக கடினமான இந்த படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின் போது எனது கால்கள் வீங்கி விட்டது. எனது உடம்பில் சோர்வு, கால்களில் காயங்கள் இருந்தபோதிலும் இந்த காட்சியை கஷ்டப்பட்டு படமாக்கினேன். நான் நம்பும் தெய்வீக சக்தி தான் எனக்கு அப்போது சிறந்த ஆற்றலை கொடுத்தது என்றும் கூறியுள்ள ரிஷப் ஷெட்டி, வர்த்தக ரீதியாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
