கடந்த சில நாட்களாக பிரியங்கா மோகன் அரை குறை ஆடையுடன் இருப்பது போன்ற ஒரு போலி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது குறித்து பிரியங்கா மோகன் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தவறான புகைப்படம் ஒன்று சுற்றி வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். ஏஐ என்பது நெறிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இப்படி தவறாக செய்வதற்கல்ல. என்ன கிரியேட் செய்கிறோம் என்பதை அறிந்து அதை பகிருங்கள், நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
