நடிகை ராகுல் ப்ரீத் சிங் கல்லூரி நாட்களில் தேசிய அளவிலான கோல்ஃப் வீராங்கனையாக இருந்தவர் என்பது பலரும் அறியாதது. பின்னர் திரைப்பட துறையில் நுழைந்து, தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அவரது முக்கியமான ஹிந்தி படங்களில் ‘தே தே பியார் தே’, ‘தேங்க் காட்’, ‘மர்ஜாவான்’ ஆகியவை அடங்கும். தென்னிந்திய சினிமாவிலும் அவர் ‘டாக்டர் ஜி’, ‘தேவ்’, ‘துருவா’, ‘இந்தியன் 2’, ‘அயலான்’, ‘என்.ஜி.கே’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ராகுல் ப்ரீத் சிங் ‘தே தே பியார் தே 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி 21 அன்று அவர் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.