பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ள தெலுங்கு ‘தெலுசு கடா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்னதாக ஊடகங்களுடன் உரையாடி ஸ்ரீநிதி ஷெட்டி படம் குறித்து சில சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “நாங்கள் இப்படத்தில் ஒரு தனித்துவமான விஷயத்தை வைத்துள்ளோம். அதை இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்க்கும்போது நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள், திருப்தி அடைவீர்கள்” என கூறியுள்ளார்.