கல்யாணம் டும் டும் டும் என்ற இணையத் தொடரில் நடிகர் சித்து நாயகனாக நடிக்கவுள்ளார். திருமணம், வள்ளியின் வேலன் ஆகிய தொடர்களில் நடித்த இவர், தற்போது இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் நாயகனாக நடித்தவர் சித்து. இத்தொடரில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
