தற்போது ஒரு வார கால பயணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். இமயமலைக்கு சென்ற ரஜினி ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கினார். அதன் பின்னர் அவர் கர்ணபிரயாகைக்கு சென்றார்.. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
