நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகிய ‘தக் லைப்’ திரைப்படத்துக்குப் பிறகு, அவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையாக உருவாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என இரு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு ‘எஸ்டிஆர் 49’ என்ற தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, இப்படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் படி, சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு “அரசன்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.