நீண்ட நாட்களாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தானா காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இருவரும் இதுவரை அவர்களது காதலை உறுதிபடுத்தாமல் இருந்தனர். ‛கீதா கோவிந்தம்’, ‛டியர் காம்ரேட்’ படங்களில் இணைந்து நடிக்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு பின்நாட்களில் காதலாக மாறியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் நேற்று (அக்டோபர் 3) காலை விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.