Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

தம்பி ராமையா கதையில் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, இயக்குநராக தந்தையையே வைத்து ‛ராஜாகிளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, அவர் மீண்டும் தந்தை தம்பி ராமையாவுடன் இணைந்து இரண்டாவது முறையாக ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நட்டி நாயகனாக நடிக்க, தம்பி ராமையாவுக்கு முக்கியமான வேடம் அமைந்துள்ளது. அரசியல் கலந்த நகைச்சுவை படமாக இது உருவாகிறது.ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நட்டி – தம்பி ராமையா இணைந்து நடிக்கும் இது முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதை, உரையாடலை தம்பி ராமையா எழுதி, இயக்கத்தை மகன் உமாபதி மேற்கொள்கிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவும், தர்புகா சிவா இசையும், துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பும் செய்கிறார். மேலும், நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துள்ள உமாபதி, தனது மாமனார் அர்ஜூன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News