தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்த, ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய தி கேம் என்ற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதுகுறித்து ஷ்ரத்தா கூறுகையில்: “தி கேம் தொடரில் கேம் டெவலப்பர் தம்பதியை சமூக வலைத்தளங்களின் தாக்கம் எப்படிச் சுழற்றி விடுகிறது, அதைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதே கதை. 7 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் அனைவரும் மிகுந்த உழைப்பைச் செலுத்தியுள்ளோம்.
என்னைப் பொறுத்தவரை, பொறுப்பான இல்லத்தரசி கதாபாத்திரங்களில்தான் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அதனால் அந்த வகை கதாபாத்திரங்களே அதிகம் வருகிறது. எனினும் காதல், ரொமான்ஸ், திரில்லர், ஆக்ஷன், உளவாளி போன்ற வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை அதிகம். நிறைய படங்கள் செய்வதே என் இலக்கு அல்ல. நடிக்கும் படங்கள் குறைவாக இருந்தாலும், சரியான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை கவர வேண்டும் என்பதே என் நோக்கம். இதுவரை எந்தக் கிசுகிசுக்களிலும் சிக்காமல் என் பயணம் தொடர்கிறது. விமர்சனங்கள் எழாதபடி சரியாக நடந்துகொள்வதே அதற்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.