Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

மனதில் நல்ல எண்ணம் மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது – இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் நல்ல எண்ணம் மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது. அரசியல் வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை வரவேற்கிறேன்.

யாரோ ஒருவர் மட்டும் ஓடிச் சென்று பதக்கம் பெறுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய கூட்டமே வெற்றிக்காக ஓடும்போது சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் அல்ல. 

கரூரில் நடந்த சம்பவம் போல இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News