ஹாலிவுட் சினிமாவில் டாம் குரூஸ், நடிகை அனா டி அர்மாஸுடன் காதல் உறவில் இருக்கிறார்கள் என சில நாட்களாக பரபரப்பாக பரவிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் இருவரும் இதுபற்றி எதுவும் கூறாத நிலையில், இவர்கள் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஜோடி இன்னும் திருமண நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இருப்பினும், திருமணத்திற்கான திட்டங்களை தற்போது வகுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், டாம் குரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் திருமணம் விண்வெளியில் நடைபெற உள்ளது. இதனால் விண்வெளியில் திருமணம் செய்யும் முதல் ஜோடி இவர்களே என கூறப்படுகிறது. 63 வயதான டாம் குரூஸ் ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்து முடித்திருந்த நிலையில், தற்போது 37 வயதான அனா டி அர்மாஸை நான்காவது முறை திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.