நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார். தனது சொந்த பந்தய நிறுவனம் அஜித் குமார் ரேஸிங் மூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்றுள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற சர்க்யூட் டி பார்சிலோனா கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் குமார் அணி 3-ம் இடத்தை பிடித்து அசத்தியது.
அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் அஜித்துடன் நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார். அஜித் மற்றும் நரேன் இணைந்து LMP3 வகை ரேஸ் காரை இயக்குவதையும், புதிய அணி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அஜித் குமார் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அணியில் F1 ஃபார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஆதித்யா படேல் இடம்பெற்றுள்ளனர்.