இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், வாத்தி திரைப்படத்திற்காக “சிறந்த இசையமைப்பாளர்” விருதைப் பெற்றார். இதன் மூலம் அவர் தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றிருந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ், இம்முறை விருது பெற்றதை ஒட்டி உலக இசை வல்லுநர் ஏ.ஆர். ரகுமான் அவருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.
ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டதாவது: “எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இது. இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக, ஏ.ஆர். ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார். மிக்க நன்றி சார். இது எனக்கு பெரும் அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்?” என்று அவர் கூறியுள்ளார்.