நடிகர் அஜித்குமார், Good Bad Ugly படத்தைத் தொடர்ந்து, கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில், அவரது Ajith Kumar Racing அணி பங்கேற்று வருகிறது. இந்த அணியினர், இதற்கு முன்பு துபாயில் 2வது இடம், இத்தாலியில் 3வது இடம், பெல்ஜியத்தில் 3வது இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில், அஜித் அணி இந்த மாதம் இரண்டு, அடுத்த மாதம் இரண்டு என மொத்தம் 4 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில், ஸ்பெயினின் புகழ்பெற்ற Circuit de Barcelonaவில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்ற Constructors Championship போட்டியில், அஜித் அணி 3வது இடம் பிடித்து சாதித்துள்ளது.
Ajith Kumar Racing அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சிறந்து விளங்கி வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவருவதாக ரசிகர்களும், நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் அணியின் 3வது இட சாதனை தொடர்பான செய்தியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.