‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் தனது அடையாளத்தை நிலைநாட்டியவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் எல்லாரது கவனத்தையும் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், ரித்திகா சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகரும் திறமையும் நல்லுள்ளம் கொண்டவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் என் மனதில் என்றும் ஒரு பொக்கிஷம் போல் இருப்பவை. ஆனால் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது எப்போதும் ரஜினிகாந்த் சார் தான். அவர் எவ்வளவு உயர்ந்த நட்சத்திரமாக இருந்தாலும், மிகவும் அன்பு, பணிவு மற்றும் எளிமை கொண்டிருக்கிறார் என்பதே ஒரு பேராச்சரியம். அவரைப் பார்க்கும் ஒவ்வொரு தருணமும் ‘எப்போதும் பணிவுடன் வாழ்வதே உண்மையான வெற்றி’ என்பதை நினைவூட்டுகிறது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் எனக்கு பெரும் ஆர்வம் உண்டு.”
என்னுடைய மனதில் முதலில் கோபத்தை எழுப்பும் விஷயம் பாலியல் வன்முறை. இப்படிப்பட்ட கொடூர குற்றங்களைச் செய்யும் ஒருவர் மனிதனாகவே இருக்க முடியாது. அந்த நபர்கள் கடுமையான தண்டனையை பெறவேண்டும். உங்களை யாராவது தாக்கினால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்களா? நான் ‘கொஞ்சம் பக்கத்தில் வந்து பாருங்களேன்’ என்பேன். தைரியம் இருந்தால் என் அருகில் வரட்டுமே. நான் நல்ல படங்களின் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன். திறமையானவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்களிடமிருந்து தினமும் புதிதாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் நடிக்கும் அனைத்து படங்களின் மொழிகளையும் கற்பதில் ஆவலாக இருப்பதால், அவை விரைவில் பழகிவிடுகின்றன. அதனால் எந்த மொழியும் எனக்கு சவாலாக இல்லை. சுவாரசியமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, என் முழு ஆற்றலையும் அதில் செலுத்த விரும்புகிறேன் என்று ரித்திகா சிங் கூறினார்.