கே.பி.ஒய் சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான பாலா, தற்போது ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். ஏழை-எளியோருக்கு உதவிகள் செய்து வந்த அவர் மீது சமீபத்தில் சில விமர்சனங்கள் எழுந்தன. வெளிநாட்டு கைக்கூலி என்றும், அவர் வழங்கிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போலி என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த பாலா, “என்னை சர்வதேச கைக்கூலி என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. நான் சாதாரணமானவன். வண்டி வாங்கிக் கொடுத்தால், அதை அவர்கள் பெயரில் மாற்றிக்கொள்வார்கள். அதனால்தான் நம்பரை மறைத்து கொடுக்கிறேன். நான் கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் நன்றாக இயங்கி வருகின்றன.
நான் செய்த உதவிகள் அனைத்தும் என் சொந்தக் காசிலிருந்து செய்ததுதான். நான் நிகழ்ச்சிகள் , ப்ரமோஷன், ஆங்கரிங் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே தான் உதவி செய்தேன். நான் சர்வதேச கைக்கூலி அல்ல நான் தினக்கூலி. சர்வதேச கைக்கூலிக்கு அர்த்தமே எனக்கு தெரியாது என்றுள்ளார்