Touring Talkies
100% Cinema

Saturday, September 20, 2025

Touring Talkies

2026 ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் தேர்வு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2026 ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைக்கு வருவதற்கு முன்பே இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இப்படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தது. வருகிற 26ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 98வது ஆஸ்கார் விருதில் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக ‘ஹோம்பவுண்ட்’ தேர்வாகியுள்ளது. மார்ச் 15, 2026 அன்று லாஸ் ஏஞ்சலஸில் ஆஸ்கார் விருது விழா நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News