தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். மேலும், மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும், இனி ஹிந்தி வாய்ப்புகளைத் தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், “தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தரமான கதைகள் கிடைக்கின்றன. அந்தப்படங்களை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஹிந்தி படங்களைத் தீவிரமாக நிராகரித்து வருகிறேன். பல கதைகள் வந்தாலும், எதுவும் சுவாரஸ்யமான அல்லது வித்தியாசமான கதாபாத்திரமாக இல்லை.
ஒரு படத்துக்காக 5 மாதங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் போது, அந்தக் கதை அல்லது கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஸ்கிரிப்ட் உற்சாகப்படுத்தினால் மட்டுமே படங்களை ஏற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.