கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்குபவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில் ரவி மோகன் – யோகி பாபு இணைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக் கூட்டணி, இப்போது வித்தியாசமான வடிவில் மீண்டும் இணைந்துள்ளது.

ரவி மோகன் இயக்கத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இதுபற்றி யோகி பாபு பேசுகையில் ‘கோமாளி’ படப்பிடிப்பு நேரத்தில், ரவி மோகன், ‘நான் படம் இயக்கினால், நீங்கதான் ஹீரோ’ என்று சொன்னார். அது வெறும் நகைச்சுவை என நினைத்தேன். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அந்த வார்த்தையை நனவாக்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
ரவி மோகன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் மூன்று படங்களைத் தொடங்கியுள்ளார். அதில் ஒன்றாக யோகி பாபுவை ஹீரோவாகக் கொண்டு இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தி ஆர்டினரி மேன்’. இப்போது இந்தக் கூட்டணி, படத்தின் புரமோஷன் காணொளியைக் கொண்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.