தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘துருவநட்சத்திரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘மசாக்கா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ரிது வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

‘மாடர்ன் மகாலட்சுமி’ என்று அழைக்கப்படும் ரிது வர்மா, இதுவரை தனது படங்களில் அதிகளவில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை. இதற்கிடையில் தனது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளை கேட்டு, “இனி கவர்ச்சியாக நடித்து பார்ப்போம்” என்று முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால், “ரிது வர்மா இனி தனது படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக உள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில் கூட குத்தாட்டப் பாடல்களில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்கிறார். தற்போது நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்” என்கிறார்கள் நடிகையின் நெருங்கிய நண்பர்கள்.