பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர் 12ல் ரிலீஸாகிறது. தான் ஹீரோவானது குறித்து பேசியுள்ள குமரன், ”சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது என் கனவு. இப்போது ஆகிவிட்டேன். நான் எமோஷனலாக இருக்கிறேன். இது என்னுடையை 17 ஆண்டு கனவு. இந்த கனவை நனவாக்கி அனைவருக்கும் நன்றி என்றுள்ளார்.
