பிரபல நகைச்சுவை நடிகரான வெண்ணிற ஆடைமூர்த்தி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே என்றும் நினைவில் நிற்கும் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்த பல படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்வையாளர்களை அவரது நகைச்சுவை பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தும். இந்நிலையில் அவரது பேரன் தற்போது வெள்ளித்திரை உலகில் அறிமுகமாக உள்ளார்.

அவரின் பேரனான ‘மனஸ் மானு’ அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர். கல்வியிலும், கலையிலும் விளங்கும் அவர் கராத்தேவில் ‘பிளாக் பெல்ட்’ பெற்றவர்.
அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ்மொழியை மிகச்சரளமாக பேச கூடியவர் வெளிநாட்டில் வாழ்ந்தபோதிலும் தன் தாய்மொழியுடன் கொண்டுள்ள பற்றும் அன்பும் இவரின் பேச்சுக்களில் வெளிப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் ஒரு திறமையான பாடகரும் ஆவார்.திரையுலகில் புதிய முகங்கள் வந்தால் எப்போதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக, முன்னணி நடிகர்களின் குடும்பத்திலிருந்து யாராவது வந்தாலோ, அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது. அந்த வகையில், வெண்ணிற ஆடைமூர்த்தியின் பேரனான மனஸ் மானுவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.