கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தனது முதல் படமான கிச்சாவின் பெயரால் ரசிகர்களால் அன்புடன் கிச்சா சுதீப் என அழைக்கப்படுகிறார். அவர் தமிழ் நடிகர் விஜய்யின் புலி மற்றும் நானீ ஈ படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த சுதீப், நடிகர் தர்ஷன் தொடர்பான விவகாரங்களைப் பற்றி பேசினார். அதாவது, நடிகர் தர்ஷன் நடித்த டெவில் படம் வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு நல்லது நடக்கட்டும். அவருடைய வேதனைகளை அவர் மட்டுமே உணர முடியும். அவரது ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் எதையாவது சொன்னால் தவறாகிப் போகும். சட்டம் தன் வழியில் செல்லும், அதற்கு நாம் குறுக்கிட முடியாது. சரி, தவறு என்பதை கோர்ட்டே தீர்மானிக்கும்.
சில விஷயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. தனிப்பட்ட விஷயங்கள் அவருக்கும் எனக்கும் இடையே மட்டுமே. அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆலோசனைகள் சில நேரங்களில் வரும். ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன். வரும்போது உறுதியுடன் வருவேன்,” என்றார்.