ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். அந்த படம் வெற்றிபெற்றதையடுத்து கவினை நாயகனாக கொண்டு ‘ஸ்டார்’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைப் பெறவில்லை. ‘ஸ்டார்’ படத்திற்குப் பிறகு இளன் தனது அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சில மாதங்களாக இளன் தானே இயக்கி, அதேசமயம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கான தலைப்பாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.